மேஷம்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மேஷ ராசி பொதுப்பலன் | ஏப்ரல் மாதம் 2026

ரிஷபம்

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.

ரிஷப ராசி பொதுப்பலன் | ஏப்ரல் மாதம் 2026

மிதுனம்

சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வேலையில் கூடுதல் பொறுப்புகள் வரலாம். பொறுமையுடன் கையாண்டால் வெற்றி நிச்சயம்.

மிதுனம் ராசி பொதுப்பலன் | ஏப்ரல் மாதம் 2026

கடகம்

திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நடக்கும். வருமானம் உயரும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.

கடக ராசி பொதுப்பலன் | ஏப்ரல் மாதம் 2026

சிம்மம்

மனதில் புது உற்சாகம் பிறக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு மகிழ்ச்சி தரும். கடன் தொல்லைகள் குறையும்.

சிம்மம் ராசி பொதுப்பலன் | ஏப்ரல் மாதம் 2026

கன்னி

நினைத்த காரியங்கள் கைகூடும் நாள். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.

கன்னி ராசி பொதுப்பலன் | ஏப்ரல் மாதம் 2026

துலாம்

நிதானமாக செயல்படுவது அவசியம். வரவுக்கேற்ற செலவுகள் வந்து சேரும். பயணங்களின் போது கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும்.

துலாம் ராசி பொதுப்பலன் | ஏப்ரல் மாதம் 2026

விருச்சிகம்

தடைபட்ட காரியங்கள் இன்று நடக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பொருளாதார நிலை சீராகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

விருச்சிக ராசி பொதுப்பலன் | ஏப்ரல் மாதம் 2026

தனுசு

செல்வாக்கு உயரும் நாள். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

தனுசு ராசி பொதுப்பலன் | ஏப்ரல் மாதம் 2026

மகரம்

தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேரும். சுப காரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையலாம்.

கும்பம்

அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் தரும் நாளாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. விடாமுயற்சியால் காரியங்களை முடிப்பீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.

மீனம்

நல்ல செய்திகள் தேடி வரும். மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அரசு வழியில் நன்மைகள் எதிர்பார்க்கலாம்.

By kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!