இன்றைய ராசிபலன் – மார்ச் 20, 2026
♈ மேஷம்:
பிரிந்தவர்கள் தேடி வருவார்கள். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
♉ ரிஷபம்:
தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். இனிய வெளியூர் பயணம் அமையும்.
♊ மிதுனம்:
குடும்பத்தில் உங்கள் மதிப்பு கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு தருவார்கள். மகிழ்ச்சியான நாள்.
♋ கடகம்:
சொந்தங்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் மூலம் லாபம் கூடும்.
♌ சிம்மம்:
சந்திராஷ்டமம் என்பதால் கூடுதல் நிதானம் தேவை. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் இருக்காது. இறை வழிபாடு அவசியம்.
♍ கன்னி:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமுடன் இருக்கவும். மற்றவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
♎ துலாம்:
உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். வாகன மாற்றம் அல்லது புதிய பொருள் சேர்க்கை உண்டு.
♏ விருச்சிகம்:
நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்கும். கணவன்-மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.
♐ தனுசு:
உங்கள் பேச்சுத் திறமையால் கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
♑ மகரம்:
வருமானத்தைப் பெருக்க புதிய வழிகள் பிறக்கும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகமும் கௌரவமும் கிடைக்கும்.
♒ கும்பம்:
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் வசூலாகாத பழைய பாக்கிகள் வசூலாகும். சுறுசுறுப்பான நாள்.
♓ மீனம்:
புதிய வாய்ப்புகள் தேடி வரும். மற்றவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நற்பலன் தரும். வெளிநாட்டுச் செய்திகள் மகிழ்ச்சி தரும்.